Screen Reader Access     A-AA+
அருள்மிகு கூடலழகர் திருக்கோயில், மதுரை - 625001, மதுரை .
Arulmigu Koodalagar Temple, Madurai - 625001, Madurai District [TM031992]
×
Temple History

தல வரலாறு

தல வரலாறு அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 47வது திவ்ய தேசம் ஆகும். இத்திருக்கோயில் மூன்று நிலைகளைக் கொண்ட (அமர்ந்த, நின்ற, கிடந்த) அரிதிலும் அரிதான அஷ்டாங்க விமானத்துடன் அமையப்பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலம் மதுரை மாநகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. சங்கத் தமிழ்வளர்த்த மாநகராம் மதுரை, தமிழ் நெறியோடு திருமால் நெறியினையும் போற்றி வளர்த்த பெருமை உடையது. பாண்டிய மன்னர்கள் பலர் திருமால் அன்பர்களாய் திகழ்ந்து, திருமாலுக்கு கோயில்களை எழுப்பினர். அத்திருக்கோயில்களில் தலையாயது கூடலழகர் திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் பாண்டிய நாட்டு திருப்பதிகள் பதினெட்டில் ஒன்றதாகத் திகழும் பெருமையுடையது. திருமங்கையாழ்வார், பெரியாழ்வார் மற்றும் திருமழிசையாழ்வார் ஆகியோர்களால் மங்களாசாசனம் பாடல் பெற்ற...

தல பெருமை

தல புராணம் அருள்மிகு கூடலழகர் தலபுராணம் பிரம்மாண்ட புராணத்தில் கதலீவன சேத்ரமகாத்மியத்தில் பன்னிரண்டு அத்தியாயங்களில் கூறப்பட்டிருக்கிறது, இப்புராணம் பிரம்மலோகத்தில் நாரதர் வேதவியாசருக்கு கூற, வேதவியாசர் சௌனகர் முதலிய ரிசிகளுக்கு அருளிச்செய்ததாக நைமிசாரணியத்தில் கூறப்படுகிறது. இப்புராணத்தில் இத்திருக்கோயிலின் அட்டாங்க விமானம் நிர்மாணிக்கப்பட்டதும் மற்றும் இத்திருக்கோயிலைச் சுற்றியுள்ள சேத்திரங்கள், தீர்த்தங்கள் மற்றும் மலைகள் ஆலயங்கள் பற்றிய விபரங்கள் குறிப்பிடப்பட்டுள்ளது. சோமசுந்தர பாண்டியன் (மலையத்துவச பாண்டியன்) ஆட்சிக் காலத்தில் சோமசுந்தர பாண்டியனுடய திருமகளாக அவதரித்த உமாதேவிக்கு செளந்திரபாண்டிய அரசனாக அவதரித்த சிவபெருமானுக்கு கூடலழகரே திருக்கல்யாண வைபவம் நடத்தி வைக்கப்பட்டதாக தலபுராணம் கூறுகிறது. அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் வேகவதி, கிருதமாலை நதிகளுக்கு இடையில் வாழை மரங்கள் செறிந்த வனத்தில், நான்முகக் கடவுளின் மைந்தனான சனத்குமாரன் தேவசிற்பியான...

இலக்கிய பின்புலம்

தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் கூடலழகருக்குப் பல திருவிழாக்களை எடுத்து மகிழ்ந்தார். ஆவணித் திருவோணத்தில் கூடலழகருக்கு சிறப்பான வழிபாடுகள் செய்தார். இத்திருவிழா ஏழு நாட்களுக்கு நடைபெறும். அதனை மாங்குடி மருதனார் மதுரை காஞ்சியில் மாயோன் மேய ஓண நன்னாள் என்ற பாடலில் சிறப்பாக விளக்கப்பட்டு உள்ளது.இத்திருக்கோயில் சங்ககால பரிபாடல் மற்றும் சிலப்பதிகாரத்தின் மூலம் அறியப்படுகிறது. சங்ககால பரிபாடலில் கூடலழகர் பெருமாள் இருந்தையூர் அமர்ந்த செல்வன் (அமர்ந்த கோலம்) என்று போற்றப்படுகிறார். சிலப்பதிகாரத்தில் மாதரி என்னும் இடைக்குல மடந்தை ஆய்ச்சியர் வையைகரையில் உள்ள திருமாலை வணங்குவதை நீடுநீர் வையை நெடுமால் அடியேத்தித் என்ற பதத்தின் மூலம் குறிப்பிடப்படுகிறது. நீடுநீர் வையை நெடுமால் அடியேத்தித் என்பதற்கு அடியார்க்கு நல்லார்...