அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் வைணவ திவ்ய தேசங்கள் 108ல் 47வது திவ்ய தேசம் ஆகும். இத்திருக்கோயில் மூன்று நிலைகளைக் கொண்ட (அமர்ந்த, நின்ற, கிடந்த) அரிதிலும் அரிதான அஷ்டாங்க விமானத்துடன் அமையப்பெற்ற திருத்தலமாகும். இத்திருத்தலம் மதுரை மாநகரின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. சங்கத் தமிழ்வளர்த்த மாநகராம் மதுரை, தமிழ் நெறியோடு திருமால் நெறியினையும் போற்றி வளர்த்த பெருமை உடையது. பாண்டிய மன்னர்கள் பலர் திருமால் அன்பர்களாய் திகழ்ந்து, திருமாலுக்கு கோயில்களை எழுப்பினர். அத்திருக்கோயில்களில் தலையாயது கூடலழகர் திருக்கோயிலாகும். இத்திருக்கோயில் பாண்டிய நாட்டு திருப்பதிகள் பதினெட்டில் ஒன்றதாகத் திகழும் பெருமையுடையது. இத்திருக்கோயிலில் பூஜைகள் வைகாணச ஆகம விதிகளின்படி நடைபெறுகிறது, இத்திருக்கோயிலின் சிறப்பு என்பது...